கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம் அடுத்துள்ள பன்னாத்தூரைச் சேர்ந்தவர் முத்து. இவர் நாகை ஆயுதப்படை காவலராக தற்போது பணியாற்றிவருகிறார். இந்நிலையில், நேற்று இரவு திட்டச்சேரியில் பணி முடித்துவிட்டு இன்று காலை காவலர் குடியிருப்புக்கு திரும்பிய முத்து, எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அதனை அறிந்த சக காவலர்கள் அவரை மீட்டு, நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.