நாகை :நாகூர் பட்டினச்சேரி மீனவர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 100 விசைப்படகுகள் மற்றும் 450க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். வாஞ்சூரில் அமைக்கப்பட்ட தனியார் துறைமுகத்தின் காரணத்தால் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் கடந்த நான்கு ஆண்டுகளில் 500 மீட்டர் தூரம் வரை கடல்நீர் உட்புகுந்ததால் இதுவரை 40 வீடுகள் 150 தென்னை மரங்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. தற்போது வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த மண்டலத்தால் கடலில் 5 அடி உயரத்துக்கு மேல் ஆக்ரோஷமாக அலைகள் சீற்றமாக காணப்படுகிறது.
இதன் காரணமாக இன்றும் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் மீனவர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனையடுத்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கப்பட்டது.