தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 2, 2022, 5:23 PM IST

ETV Bharat / state

நாகையில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகள், கடல் குதிரைகள் பறிமுதல்

நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்தயிருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள 1079 கிலோ கடல் அட்டைகள், கடல் குதிரைகள், சுறாமீன் இறக்கைள் ஆகியவற்றை நாகை கடலோர பாதுகாப்புக்குழு பறிமுதல் செய்தனர்.

பறிமுதல்
பறிமுதல்

நாகப்பட்டினம்:கடல் அட்டை, கடல் குதிரை உள்ளிட்ட 53 கடல் வாழ் உயிரினங்களைப் பிடிப்பதற்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. சட்டவிரோதமாக பிடிக்கப்படும் இவைகளுக்கு சீனா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அமோக வரவேற்பு உண்டு. அந்நாட்டு மக்கள் உணவுக்காகவும், மருத்துவத்திற்காகவும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இந்நிலையில் நாகையிலிருந்து கடல் அட்டைகள், கடல் குதிரைகள், சுறா மீன் இறக்கைகள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவதாக நாகை கடலோரப் பாதுகாப்புக் குழுவிற்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கடலோரப் பாதுகாப்புக் குழு ஆய்வாளர் ராஜா தலைமையிலான காவலர்கள் அக்கரைப்பேட்டை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

கடல் குதிரைகள் பறிமுதல்

இதில் அங்குள்ள பழைய கட்டடத்தில் ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்ட 812 கிலோ கடல் அட்டைகள், 248 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள், பதப்படுத்தப்பட்ட 15 கிலோ எடையுடைய சுறா மீன் இறக்கைகள், பதப்படுத்தப்பட்ட 4 கிலோ கடல் குதிரைகள் ஆகியவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். இவற்றை கடலோர பாதுகாப்புக்குழுவினர் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

பறிமுதல் செய்யப்பட்டவை

விசாரணையில், நாகை பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த முருகானந்தம் (51) என்பவர் கடத்த முயற்சித்ததும், கடலோரப் பாதுகாப்புக்குழுவினர் வந்தவுடன் தப்பிச்சென்றதும் தெரியவந்தது. தப்பியோடிய முருகானந்த்தை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் நாகை வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இதையும் படிங்க: பைனான்சியர் சுரேஷ் லால்வானிக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. ரெய்டு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details