நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் தனியார் பள்ளியில் பாரம்பரிய முறையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. பாரம்பரிய முறையில் கலைப்பொருள்களுடன் குடிசை வீடு அமைக்கப்பட்டிருந்தது.
அங்கு உரலில் நெல்லை இடித்து மண்பானையில் பொங்கல் பொங்கி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் பொங்கலோ பொங்கல் என்று குலவை சத்தத்துடன் படையலிட்டு சமத்துவ பொங்கலைக் கொண்டாடினர்.
மயிலாடுதுறை அருகே தனியார் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா மேலும் கும்மியாட்டம், பொய்க்கால் குதிரை, கோலாட்டம், ஒயிலாட்டம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆரவாரத்துடன் பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சி மாணவ மாணவிகள் பெற்றோர்களை உற்சாகப்படுத்தியது.
இதையும் படிங்க: திருநங்கைகளுக்கு சீர்வரிசை வழங்கி தர்பாரை கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்!