நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி அடுத்த ஆலவேலி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரின் மகன் விக்னேஷ் (19). இவர் 2017ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது படிப்பில் நாட்டமின்றி வீட்டிலிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு சென்னை சென்றுள்ளார். இதனையடுத்து பெற்றோர் தன் மகன் விக்னேஷ் காணவில்லை என சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரைப் பெற்றுக்கொண்ட சீர்காழி காவல் துறையினர் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் காணாமல்போன, மாணவன் குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காணாமல்போன பள்ளி மாணவன் விக்னேஷ் சென்னை வடபழனியில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வருவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.