தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா விழிப்புணர்வு பாடல் எழுதிய ஆறாம் வகுப்பு மாணவி!

நாகை: கரோனா விழிப்புணர்வுடன், வீட்டில் இருக்க வேண்டியதன் அவசியத்தை பொதுமக்களுக்கு வலியுறுத்தும் வகையில் 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவி எழுதி, பாடியுள்ள பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கரோனா விழிப்புணர்வு பாடல் எழுதிய ஆறாம் வகுப்பு மாணவி
கரோனா விழிப்புணர்வு பாடல் எழுதிய ஆறாம் வகுப்பு மாணவி

By

Published : Apr 6, 2020, 3:45 PM IST

கரோனா தொற்று காரணமாக வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பலரும் வீட்டில் இருக்காமல் வெளியே சுற்றித் திரிக்கின்றனர்.

இதற்கிடையில் ஊரடங்கு உத்தரவை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ள மீனவ கிராமத்தை சேர்ந்த ஸ்ரீஜா பழைய பாடல் வரிகளை தழுவி, தானே கரோனா வைரஸ் குறித்து பாடல், எழுதி பாடியுள்ளார்.

கரோனா விழிப்புணர்வு பாடல் எழுதிய ஆறாம் வகுப்பு மாணவி!

அப்பாடலில் ”கரோனா தொற்று வைரஸ் வேகமாக பரவுவதால், எச்சரிக்கையா நாம இருக்கனும் என்றும் உலகம் முழுக்க ஏற்ற, தாழ்வு இல்லாமல் பரவுது நம்ம நாம தான் பாதுகாக்கனும் என்று தொடங்கி முகக் கவசம் அணிய வேண்டும், கைகளை கழுவ வேண்டும்” என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. 6ம் வகுப்பு படிக்கும் மாணவியின் இந்த விழிப்புணர்வு பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:'இவனுங்க என்ன டிசைன்னுனே புரியல'- ஆதங்கப்பட்ட மித்ரன்

ABOUT THE AUTHOR

...view details