தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி மாணவருக்கு கரோனா - 8ஆம் வகுப்பு பள்ளிகள் திறக்க ஆலோசனை

மயிலாடுதுறையில் பள்ளி மாணவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் சக மாணவர்கள் 100 பேருக்கு சுகாதாரத்துறையினர் கரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

பள்ளி மாணவருக்கு கரோனா தொற்று உறுதி
பள்ளி மாணவருக்கு கரோனா தொற்று உறுதி

By

Published : Sep 14, 2021, 8:50 AM IST

Updated : Sep 14, 2021, 4:50 PM IST

மயிலாடுதுறை :தமிழ்நாட்டில் கரோனா தொற்று குறைந்ததால் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவருக்குக் காய்ச்சல் இருந்ததால் பரிசோதனை செய்துள்ளார். சோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மாணவர்களுக்கு கரோனா உறுதி

இதனால் அவருடன் வகுப்பில் படித்த சக மாணவர்கள், தொடர்பிலிருந்த மாணவர்கள் 100 பேர், ஆசிரியர்கள் ஆகியோருக்குப் பள்ளியில் சுகாதாரத்துறையினர் கரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

இதனால் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏற்கனவே அரசு, தனியார்ப் பள்ளியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பது குறித்து சென்னையில் முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி இன்று(செப்.14) ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 1,580 பேருக்கு கரோனா

Last Updated : Sep 14, 2021, 4:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details