மயிலாடுதுறை:தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கடலோர தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என ஒரு சில இடங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் கனமழை பள்ளிகளுக்கு விடுமுறை இதனையடுத்து, கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (மார்ச்.7) 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஐபிஎல் 2022: முதல் ஆட்டம் சென்னை vs கொல்கத்தா... முழு அட்டவணை...