தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கு பேருந்துகளில் செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பள்ளிப் பேருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அழகிரிசாமி ஆகியோர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 380 வாகனங்களை ஆய்வு செய்தனர்.
செல்போன் பேசினால் ஓட்டுநர்களுக்கு கடும் தண்டனை - school bus
நாகப்பட்டினம்: செல்போன் பேசிக்கொண்டு பள்ளி வாகனங்களை இயக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
பள்ளி வாகனங்களில் உள்ள முதலுதவி கருவிப் பெட்டிகள், தீயணைப்புக் கருவிகள், அவசர வழி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த ஆய்வில் 10 வாகனங்கள் அதிரடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டன.
பின்னர், மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, ‘பள்ளி வாகன ஓட்டுநர்கள் குழந்தைகளையும், மாணவ, மாணவிகளைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்ல வேண்டும். செல்போன் பேசிக்கொண்டு பள்ளி வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரிக்கைவிடுத்தார்.