புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் சூரிய கிரகணத்தை முன்னிட்டு புண்ணிய கால சிறப்பு அபிஷேக பூஜைகளுடன் மகாதீபாராதனை நடைபெற்றது.
முன்னதாக மூலவர் தர்பாரண்யேஸ்வரர், தியாகராஜர், பிரணாம்பிகை, சனீஸ்வர பகவான் சுவாமிகளுக்கு பால், சந்தனம், தேன், திரவியம் உள்ளிட்டப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.