தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாதிரி வாக்குப்பதிவு: ஆர்வத்துடன் வாக்களித்த பொதுமக்கள்! - நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்: தமிழ்நாட்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, மாதிரி வாக்குப்பதிவு செயல் விளக்க நிகழ்ச்சி வருவாய்த் துறை அலுவலர்கள் முன்னிலையில் இன்று (மார்ச் 5) நடைபெற்றது.

sample poll in nagapattinam  Nagapattinam New Bus stand  6 constituency sample poll in nagapattinam  நாகப்பட்டினத்தில் மாதிரி வாக்குப்பதிவு  நாகப்பட்டினம்  நாகப்பட்டினம் மாவட்டச்செய்திகள்
sample-poll-for-voters-in-all-nagapattinam-district-constituency

By

Published : Mar 5, 2021, 8:44 PM IST

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரவீன் பி. நாயர் உத்தரவின்பேரில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

அதன்படி ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மாதிரி வாக்குப்பதிவு செயல் விளக்க நிகழ்ச்சி இன்று (மார்ச் 5) நடைபெற்றது.

நாகப்பட்டினத்தில் மாதிரி வாக்குப்பதிவு

நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மாதிரி வாக்குப்பதிவு செயல் விளக்க நிகழ்ச்சியில் எப்படி வாக்களிப்பது என்பது குறித்து பொதுமக்களுக்கு வருவாய்த் துறை அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு செய்தனர்.

இதேபோல, நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர், நாகப்பட்டினம், வேதாரண்யம், மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளில் மாதிரி செயல் விளக்க மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுவதாக மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி தெரிவித்தார்.

இதையும் படிங்க:நாகையில் இருசக்கர வாகனம் திருட்டு- பட்டப்பகலில் கைவரிசை!

ABOUT THE AUTHOR

...view details