தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகை கடைமடைப் பகுதியில் சம்பா அறுவடை பணிகள் தீவிரம் - nagapattinam district news in tamil

நாகை: கடைமடைப் பகுதியில் சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெறுவதால் உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க விவசாயிகள் கோரிக்கைவைத்துள்ளனர்

samba harvest
samba harvest

By

Published : Jan 10, 2020, 10:33 AM IST

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்றழைக்கப்படும் டெல்டா மாவட்டமான நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 11 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி நடைபெற்றது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு மேட்டூர் அணை ஐந்துமுறை நிரம்பியதாலும் இயற்கை அவ்வப்போது மழை பொழிந்ததாலும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் சம்பா சாகுபடி நல்ல நிலையில் அதிக விளைச்சலைக் கண்டுள்ளது.

நாகை கடைமடைப் பகுதியில் சம்பா அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரம்


தற்போது டெல்டா மாவட்டத்தின் கடைமடைப் பகுதியான நாகப்பட்டினம் மாவட்டத்தில் பாலையூர், பெருங்கடம்பனூர், தேவூர், ஒக்கூர், இருக்கை, திருமருகல், வெங்கடங்கால் குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் குறுகிய கால பயிர்களின் அறுவடை தொடங்கியுள்ளது.

இன்னும் ஒருவார காலத்தில் முழுவதும் அறுவடை பணி தொடங்கவுள்ள நிலையில், இதுவரை தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. எனவே தமிழ்நாடு அரசு டெல்டா மாவட்டங்களில் ஒரே நேரத்தில் அனைத்து இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என கடைமடைப் பகுதி விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: மதுரையில் ஜல்லிக்கட்டுத் திருவிழா - மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் ரெடி

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details