தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகர் சூர்யாவைத் தாக்கும் இளைஞர்களுக்கு  ரூ.1 லட்சம் பரிசு தரப்படும் - பாமக நிர்வாகி - அண்மை பாமக செய்திகள்

நடிகர் சூர்யா நடித்த 'ஜெய்பீம்' படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாமகவினர்  மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதன்பின் திரையரங்கில் ஓடிக்கொண்டிருந்த நடிகர் சூர்யா நடித்த 'வேல்' படத்தின் காட்சியைத் தடுத்து நிறுத்திப் போராட்டம் செய்தனர்.

actor suriya threated by PMK Functionries
actor suriya threated by PMK Functionries

By

Published : Nov 14, 2021, 7:10 PM IST

நாகப்பட்டினம்: நடிகர் சூர்யாவைத் தாக்கும் இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு தரப்படும் என மயிலாடுதுறை பாமக மாவட்டச் செயலாளர் பேட்டியளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் த.செ.ஞானவேல் இயக்கி, நடிகர் சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படம் ஓடிடியில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்தப்படத்தில் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங்கிடம் பாமக மாவட்டச் செயலாளர் சித்தமல்லி பழனிசாமி தலைமையில் பாமகவினர், ஜெய்பீம் தயாரிப்பாளர், இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர்.

'சூர்யா, ஜோதிகா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்'

அதில், 'நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வகையில் திட்டமிட்டு அனைத்து கதாபாத்திரங்களுக்கும் உண்மைப் பெயரைச் சூட்டியுள்ளனர். வேண்டுமென்றே வன்னியர் சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் விதமாக அப்படத்தில் ஒரு குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கம் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தைக் காட்டியும்,

மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் குருவின் பெயரைப் படத்தில் வில்லனுக்கு வைத்து, அவரது புகழுக்கு மிகப்பெரிய களங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளனர்.

வன்னிய சமுதாய மக்கள் அனைத்து சமுதாய மக்களுடன் இணக்கமாகப் பழகி வரும் வேளையில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பிற சமுதாயத்திற்கு எதிராக வன்னியர்கள் செயல்படுவது போலும் மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்துவது போலும் படத்தை எடுத்துள்ளனர்.

எனவே, 'ஜெய்பீடம்' படத் தயாரிப்பாளர்களான சூர்யா, ஜோதிகா; இயக்குநர் த.செ. ஞானவேல் ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து நடிகர் சூர்யா நடித்த 'வேல்' திரைப்படம் திரையிடப்பட்ட (பியர்லஸ் திரையரங்கிற்கு) பாமகவினர் வருவதை அறிந்து திரையரங்க நிர்வாகம் போஸ்டரை மாற்றி ஒட்டியது.

நடிகர் சூர்யாவைத் தாக்கும் இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு தரப்படும் - பாமக நிர்வாகி

திரையரங்கிற்கு வந்த பாமகவினர் திரைப்படக் காட்சியை நிறுத்தச் சொன்னதால், அப்போது திரையில் ஓடிக்கொண்டிருந்த 'வேல்' திரைப்படத்தின் காட்சி நிறுத்தப்பட்டது. நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாமகவினர் முழக்கமிட்டனர்.

நடிகர் சூர்யாவின் படங்கள் இடம்பெற்றிருந்த போஸ்டரைக் கிழித்தனர். படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் வெளியேறினர்.

சூர்யாவைத்தாக்கினால் ரூ.1 லட்சம் பரிசு

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்டச் செயலாளர் பழனிசாமி, ' சாதிக் கலவரத்தைத் தூண்டும் வகையில், வன்னிய சமுதாய மக்களை இழிவுபடுத்தும் நடிகர் சூர்யா மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தால், நடிகர் சூர்யாவைத் தாக்கும் இளைஞர்களுக்கு மாவட்ட பாமக சார்பில் ரூ.1 லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும்; மாவட்டத்தில் சூர்யாவின் எந்த படத்தையும் திரையிடுவதற்கு பாமக அனுமதிக்காது’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இச்சம்பவம் அறிந்து வந்த மயிலாடுதுறை காவல் துறையினர் திரைப்படக் காட்சியை நடத்தக் கூறினர்.

ஆனால், அதற்கு மறுப்புத் தெரிவித்து நாங்கள் படத்தை மாற்றிக்கொள்கிறோம் என்று கூறி காட்சிகளை திரையரங்க நிர்வாகத்தினர் ரத்து செய்தனர். இந்தச் சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க - உணவகங்களுக்கு வெளியே இறைச்சி வைக்கத் தடை

ABOUT THE AUTHOR

...view details