நிவர் புயலால் நாகப்பட்டினத்தில் கடந்த 10 நாள்களாக கனமழை, கடல் சீற்றம் ஆகியவை காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் படகுகளை கரையோரத்தில் நிறுத்திவைத்தனர்.
இதேபோன்று மயிலாடுதுறை அடுத்த தரங்கம்பாடி தாலுகா வானகிரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்பவரும் தனது விசைப்படகை பூம்புகார் துறைமுகத்தில் நிறுத்திவைத்தார்.
நேற்று (நவ. 30) இரவு பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் கடல்சீற்றம் ஏற்பட்டது. இதனால் மீனவர் செந்தில் விசைப்படகு கடலில் மூழ்கியது. இதையறிந்த வானகிரி மீனவர்கள் மூழ்கிய படகினை, கரைக்கு இழுத்துவரும் முயற்சியில் ஈடுபட்டள்ளனர்.
சேதமடைந்த விசைப்படகின் மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் ஆகும். இது குறித்து பூம்புகார் கடலோரக் காவல் படையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: நிவர் புயலால் ஏற்பட்ட சேதம்: ஓடிவந்து உதவிய தன்னார்வலர்கள்