தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலவசமாக பிரியாணி கேட்டு தகராறு செய்த ரவுடி - சிறையில் விருந்து வைத்த காவல்துறை! - நாகை மாவட்ட செய்தி

நாகப்பட்டினம்: சீர்காழியில் இலவசமாக பிரியாணி கேட்டு, தரமறுத்த உரிமையாளரை தாக்கி, கடையை சூரையாடிய ரவுடியை காவல்துறையினர் கைது செய்தனர்.

rowdy-who-had-a-dispute-with-biryani-for-free
rowdy-who-had-a-dispute-with-biryani-for-free

By

Published : May 24, 2020, 9:34 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி ரயில்வே ரோட்டில் தனியார் ஃபாஸ்ட்புட் உணவகம் இயங்கி வருகிறது. இந்தக் கடையில் இலவசமாக பிரியாணி தரும்படி அப்பகுதியைச் சேர்ந்த ரவுடி கட்டை ராஜா என்பவர் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து, பிரியாணி தரமறுத்த கடை உரிமையாளர் கருணாகரனை தாக்கியதோடு மட்டுமல்லாமல், கடையை சூரையாடியுள்ளார். இது குறித்து கடை உரிமையாளர் கருணாகரன் சீர்காழி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

பின்னர் இது குறித்து விசாரித்த காவல்துறையினர், ரவுடி கட்டை ராஜாவை கைது செய்து சிறையிலடைத்தனர்.

இதையும் படிங்க:கேரளாவிற்கு கடத்த முயன்ற ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details