தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சீர்காழி அருகே ரவுடி ரெட் தினேஷ் வெட்டிக்கொலை! - சீர்காழி நியூஸ் அப்டேட்ஸ்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பிரபல ரவுடி தினேஷ் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

சீர்காழியில் ரவுடி வெட்டிக்கொலை செய்த மர்ம நபர்கள்
சீர்காழியில் ரவுடி வெட்டிக்கொலை செய்த மர்ம நபர்கள்

By

Published : Dec 26, 2022, 8:13 AM IST

Updated : Dec 26, 2022, 4:53 PM IST

மயிலாடுதுறை: சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தை சேர்ந்தவர் ரெட் தினேஷ்(26). ரவுடியான இவர் மீது சீர்காழி, புதுப்பட்டினம், செம்பனார்கோவில் காவல் நிலையங்களிவ் பல்வேறு குற்ற வழக்குககள் நிலுவையில் உள்ளது. ரவுடி ரெட் தினேஷ் சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு ரெட் தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் கோவில்பத்து பகுதியில், காரில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருக்கும் போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நான்கு பேர் ரெட் தினேஷை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.

இதில் ரெட் தினேஷுக்கு கை மற்றும் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, அதே இடத்தில் மயங்கி விழுந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி காவல்துறையினர், ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்த ரெட் தினேஷை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ரெட் தினேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சீர்காழி காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து, அரிவாளால் வெட்டி கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கொலையாளிகளை விரைந்து கண்டுபிடிக்க மூன்று தனிப்படைகளை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரர் நிஷா உத்தரவிட்டுள்ளார். ரெட் தினேஷ் கஞ்சா வழக்கில் குண்டாஸ் வழக்கில் கைது செய்ய்ப்பட்டு, சிறையில் இருந்து தற்போது தான் வெளியே வந்தது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க:நடிகை துனிஷா சர்மா தற்கொலைக்கு காரணம் என்ன தெரியுமா?

Last Updated : Dec 26, 2022, 4:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details