தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சர்! - fisherman

கடலில் மீன் பிடித்து கொண்டு இருந்தபோது வலையில் பெரிய ராக்கெட் லாஞ்சர் சிக்கியுள்ளது.

கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சர்
கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சர்

By

Published : May 9, 2021, 3:51 PM IST

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி அடுத்த செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சபரிநாதன். இவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த நான்கு பேர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இந்நிலையில், வேதாரண்யத்திற்கு கிழக்கே சுமார் எட்டு நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களது வலையில் பெரிய ராக்கெட் லாஞ்சர் சிக்கியுள்ளது.

கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சர்

இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பினர். இதுகுறித்து மீனவர்கள் வேளாங்கண்ணி கடலோர காவல் படை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் அங்கு சென்று ராக்கெட் லாஞ்சரை கைப்பற்றினர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:

ABOUT THE AUTHOR

...view details