மயிலாடுதுறை:பெசன்ட் நகரில் வீட்டுவாசலில் நின்றிருந்த பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை அடையாளம் தெரியாத நபர்கள் சமீபத்தில் பறித்துச் சென்றனர்.
மேலும், அப்பகுதி கோயில் உண்டியல் உடைத்து பணம் திருடப்பட்டது. இதையொட்டி,பாதுகாப்பு காரணங்களுக்காக குடியிருப்புவாசிகள் ஒன்றிணைந்து ரூ.2 லட்சம் செலவில் அந்நகரில் 18 இடங்களில் சிசிடிவி கேமராக்களை அமைத்துள்ளனர். அதன் ஒளிபரப்பை குடியிருப்புவாசிகள் அனைவரும் பார்த்துக்கொள்ளும் வகையில் மொபைல் போனுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 4 நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் நள்ளிரவில் 3 இளைஞர்கள் வீடுவீடாகச் சென்று நோட்டமிட்டுள்ளனர். சத்தம்கேட்ட குடியிருப்புவாசி ஒருவர் மொபைல் போனில் பார்த்தபோது, வெளியில் மர்மநபர்கள் திரிவதைக் கண்டு, போலீஸாருக்கு தகவல் தந்துள்ளார். இதற்கிடையில், மர்மநபர்கள் வந்த வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்து நின்றுவிட்டதால், அவர்கள் அப்பகுதியில் நிறுத்தியிருந்த டூவீலரில் பெட்ரோல் திருடி அதனை அவர்களது வாகனத்தில் ஊற்ற வந்தபோது, காவல்துறை வந்ததால் அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
மெத்தனத்தில் காவல்துறை