மயிலாடுதுறை:தரங்கம்பாடி தாலுகா எருக்கட்டாஞ்சேரியில் வசித்து வருபவர் பாலாஜி (49). இவர் பாஜக மாவட்ட பொதுச் செயலாளராக உள்ளார். இவர் ஒழுகைமங்கலத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்த வீட்டின் முன்பகுதியை பாஜக கட்சி அலுவலகமாக பயன்படுத்தி வருகிறார். கட்சி அலுவலகம் உள்ள இடம் தொடர்பாக அதே பகுதியில் வசிக்கும் உதயகுமார் குடும்பத்தினருக்கும் இவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (ஜூன் 1) வீட்டின் முன்பகுதி கீற்றுகொட்டகை திடீரென்று தீப்பற்றி எரிந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தரங்கம்பாடி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இதில் முன்பகுதி கொட்டகை எரிந்து சேதமானது. இச்சம்பவம் அறிந்து வந்த பாலாஜி, சிசிடிவி பதிவுகளை பார்த்தபோது உதயகுமார் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்துவது அதில் பதிவாகியிருந்தது.