மயிலாடுதுறை மாவட்டம், உளுத்துக்குப்பை கிராமத்தில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக அப்பகுதியில் உள்ள ட்ரான்ஸ்ஃபார்மர் பழுது காரணமாக குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் மின்சார வசதி, குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பலமுறை தெரியப்படுத்தியும் நடவடிக்கை எடுக்காததால், மயிலாடுதுறை-சிதம்பரம் சாலையில் காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காலி குடங்களுடன் சாலை மறியல் இதனால் போக்குவரத்து இரண்டு மணி நேரம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை காவல் துறையினர், ஊராட்சிமன்றத் தலைவர் ராஜ்குமார் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இப்பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியின் பெயரில் பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: தமிழ் முக்கியத்துவமற்ற மொழிப் பாடமா? - அமைச்சர் அன்பில் மகேஷ் காட்டம்!