தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வருவாய்த் துறை அலுவலர்களைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்! - nagai people protest

நாகை: 100 ஆண்டுகளுக்கு மேல் வசித்துவரும் இடத்தை வருவாய்த் துறை அலுவலர்கள் அளக்க முயற்சி செய்வதாகக் கூறி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

road block protest in nagai
road block protest in nagai

By

Published : Nov 2, 2020, 4:22 PM IST

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் வடக்குவெளி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இக்கிராமத்தில் உள்ள இடத்தை கிராம மக்கள் 100 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்படுத்திவருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மக்கள் பயன்பாட்டில் உள்ள இந்த இடத்தை வருவாய்த் துறை அலுவலர்கள் அளக்க முயற்சி செய்வதாக கூறி அக்கிராம மக்கள் கீழ்வேளூர் கடை தெருவில், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்தச் சாலை மறியல் போராட்டத்தால் நாகை - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இப்போராட்டத்தில், நில அளவீடு செய்வதைக் கைவிட வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கீழ்வேளூர் காவல் ஆய்வாளர் முருகேசன் கிராம மக்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

கீழ்வேளூர் காவல் ஆய்வாளர் முருகேசன்

இதையும் படிங்க: தெற்கு ரயில்வேயின் புதிய மைல்கல்!

ABOUT THE AUTHOR

...view details