தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சீற்றம் காரணமாக கடல் அரிப்பு: குடியிருப்புக்குள் நீர் உட்புகும் அபாயம்! - குடியிருப்புக்குள் கடல்நீர் உட்புகும் அபாயம்

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணியில், கடல் சீற்றம் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டு குடியிருப்புக்குள் நீர் உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

velankanni
velankanni

By

Published : May 26, 2021, 7:37 AM IST

வங்கக் கடலில் உருவாகியுள்ள 'யாஸ்' புயல் காரணமாக நாகப்பட்டினம் துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக, வேளாங்கண்ணி கடற்கரையில் கடல் சீற்றம் காரணமாக சுமார் 50 அடி தூரத்திற்கு மண் அரிப்பு ஏற்பட்டு கடல் நீர் உட்புகுந்து உள்ளது. இதனால், அருகிலிருந்த கடைகள் அனைத்தும் மேடான பகுதிக்கு மாற்றப்பட்டன.

கடல் சீற்றம் காரணமாக மண்ணரிப்பு

கடல் சீற்றம் காரணமாக ஹரிமாஸ் விளக்குகள், கடலோர காவல் குழும உயர் கோபுர மேடை ஆகியவை சேதமடையும் நிலையில் உள்ளன. இந்த கடல் அரிப்பு காரணமாக, ஆரிய நாட்டு தெரு, மீனவர் குடியிருப்பு பகுதிகளிலும் கடல் நீர் உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புயல், வெள்ளக் காலங்களில் தொடர்ந்து கடல் அரிப்பு ஏற்பட்டுவதால் தமிழ்நாடு அரசு கடற்கரை ஓரங்களில் கருங்கல்லால் தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும் என கடற்கரை வியாபாரிகள், மீனவ கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கேரளாவில் கடல் சீற்றம்.. ஆழ்கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்பு!

ABOUT THE AUTHOR

...view details