தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரிங் ரோடு நிலம்: எம்.எல்.ஏ. ஆய்வு - எம்.எல்.ஏ ராஜகுமார்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகரில் புறவழிச்சாலை (ரிங்ரோடு) அமைப்பதற்காக நிலம் தேர்வு செய்யும் பணிகளை எம்.எல்.ஏ.ராஜகுமார் ஆய்வு செய்தார்.

ring
ring

By

Published : Jul 21, 2021, 11:59 PM IST

மாப்படுகை, பல்லவராயன்பேட்டை, உளுத்துக்குப்பை ஆகிய பகுதிகளில் குடியிருப்பு வீடுகளுக்கு பாதிப்பு இல்லாமல் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்கள், தனியார் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு நிலம் ஆர்ஜிதம் செய்வது குறித்து அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ. ராஜகுமார் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மயிலாடுதுறை புறவழிச்சாலை அமைக்க கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எம்.எல்.ஏவாக இருந்தபோது முயற்சி செய்தேன். அதன் பின்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது அதனை கொண்டுவருவதற்காக ஆய்வு பணிகளை தொடங்கியுள்ளேன்.

திட்ட மதிப்பீடு, நிலம் ஆர்ஜிதம் செய்ய வேண்டிய பணிகள், ரயில்வே மேம்பாலம் தனித்திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. புறவழிச்சாலை அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசு அனுமதிக்காக சென்றுள்ளது.

16.6கி.மீ, தூரத்திற்கு புறவழிச்சாலை (ரிங்ரோடு) அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் இருந்து சீர்காழி புறவழிச்சாலை வரை அகலப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதில் இந்த புறவழிச்சாலை (ரிங்ரோடு) இணைக்கப்பட உள்ளது. பணிகளை துரிதப்படுத்த ஆய்வு தொடங்கியுள்ளோம்.

இது குறித்து முதலமைச்சர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் குறித்து நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் விரைவில் இப்பகுதியில் ஆய்வு செய்வார். புறவழிச்சாலை அமைக்க முதல்கட்டமாக திருவிழந்தூரில் இருந்து உளுத்துக்குப்பைவரை நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு 7 கி.மீ தூரத்திற்கான பணிகள் முதலில் தொடங்கும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details