தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இந்நிலையில் இன்று (பிப்.27) மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை வருவாய் துறையினர் பூட்டி சீல் வைப்பதாக தெரிவித்தனர்.
அதனால் அலுவலகத்தில் உள்ள பொருள்களை அதிமுகவினர் அப்புறப்படுத்தினர். அதைத்தொடர்ந்து, மயிலாடுதுறை சட்டப்பேரவை அலுவலகத்தை வட்டாட்சியர் பிரான்ஸ்வா முன்னிலையில் வருவாய் துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.