நாகப்பட்டினம் மாவட்டத்தில் 71ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, கிராமங்களில் கிராம சபைக்கூட்டங்கள் நடைபெற்றன. அதன்படி பல்வேறு ஊராட்சிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு, காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும், புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு, ஐந்து, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம் - ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்
நாகப்பட்டினம்: ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மயிலாடுதுறை ஒன்றியம் வள்ளலாகரம் ஊராட்சி, உளுத்துக்குப்பை ஊராட்சி, குத்தாலம் மேலையூர் ஊராட்சி, நல்லத்துக்குடி ஆகியவற்றில் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. மேலும், மயிலாடுதுறையை தலைமையிடமாகக்கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்று தீர்மானங்கள் இயற்றப்பட்டன. இதேபோன்று மாப்படுகை ஊராட்சியில் ஹைட்ரோகார்பன் திட்டம், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கிராம சபைக் கூட்டத்தில் அலுவலர்கள் தீர்மானம் நிறைவேற்ற மறுத்துள்ளனர்.
இதனால், கிராம சபைக் கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னர் ஒருமனதாக ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக மட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.