தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விசைப் படகுகளில் இருந்து சீன எஞ்ஜின்கள் அகற்றம்!

நாகை: சீர்காழி அருகே பழையாரில் விசை படகுகளிருந்து சீன எஞ்ஜினை, கிரேன் மூலம் அகற்ற கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Removal of Chinese engines from keyboats

By

Published : Jul 30, 2019, 4:17 AM IST

நாகை மாவட்டம் சீர்காழி அருகே பழையார் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இங்கு தினம்தோறும் 500க்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. அதில், 8 விசை படகில் அரசால் தடைசெய்யப்பட்ட சீன எஞ்ஜின் பயன்படுத்தி மீன்பிடிக்கப்பட்டு வந்தன.

இதனால் குறைந்த திறன் கொண்ட விசைப்படகு மீனவர்கள் 250க்கும் மேற்பட்டோர், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி காலவரைற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது, இது போன்ற தவறான செயலில் ஈடுபடும் ஆழ்கடல் விசைப்படகு உரிமையாளர்களிடம், அலுவலர்கள் கையூட்டு பெற்றுக் கொண்டு இவற்றை கண்டுகொள்வதில்லை எனவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் குற்றஞ்சாட்டினர். மேலும், உடனடியாக சீன எஞ்ஜின்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

விசை படகுகளிலிருந்து சீன எஞ்ஜின்கள் அகற்றம்

சுருக்கு மடிவலைகள் பயன்படுத்தி மீன்பிடித்தவர்களின் விசைப்படகுகளை துறைமுகத்தில் நிறுத்தவிடாமல் தடுத்ததாள் மீனவர்களுக்கிடையே கடந்த 20 ம்தேதி வாக்குவாதம் முற்றி கல் வீச்சு மற்றும் படகுகளின் கண்ணாடி உடைப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதனால் பதற்றமான சூழல் உருவானதால், சீர்காழி வட்டாச்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் கண்மணி இரு தரப்பு மீனவர்களையும் அழைத்து அமைதிப் பேச்சிவார்த்தை நடத்தினார்.

இதில் சுருக்குமடி வலை, சீன எஞ்ஜின்களை பயன்படுத்தக் கூடாது எனவும், எஞ்ஜினை மாற்றும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லக் கூடாது எனவும், அரசு நிர்ணயித்துள்ள விதிகளுக்குட்பட்டு முறையான உரிமம் பெற்று தொழிலுக்கு செல்லவேண்டும் என உத்தரவிட்டார். இதனையடுத்து ராட்சத கிரேன் மூலம் விசைபடகிலிருந்து சீன எஞ்ஜின்களை மீனவர் அகற்றி வருகின்றனர்

ABOUT THE AUTHOR

...view details