மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு தோப்புத்தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது வீட்டில் நேற்று முன்தினம் (ஜுன்.15) மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகத்தில் தீ அருகில் உள்ள பட்டு, செல்வம் ஆகியோரது வீடுகளிலும் பரவியது.
பின்னர் 3 வீடுகளும் முற்றிலும் எரிந்து தீக்கீரையானது. இந்த விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான நகை, பணம், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவை முற்றிலும் எரிந்து நாசமானது.
மேலும் வீட்டின் அருகே கட்டப்பட்டிருந்த இரண்டு ஆடுகளும் உயிரிழந்தன. தீயை அணைக்க முற்பட்டபோது பட்டு என்பவருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டு, அவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.