நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால், வருமானம் இல்லாமல் ஏழை குடும்பத்தினர் வீட்டில் முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தன்னார்வலர்கள் உதவிக்கரம் நீட்டிவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக நாகையில் செயல்பட்டுவரும் எஸ்.ஓ.எஸ். என்ற ஆதரவற்ற குழந்தைகளுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பாகக் குடும்ப வலுவூட்டும் திட்டத்தின்கீழ் 10 கிராமங்களைச் சேர்ந்த நலிவடைந்த ஏழை குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
அரிசி, பருப்பு, எண்ணெய், மசாலா பொருள்கள், கிருமி நாசினி, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் அடங்கிய நிவாரணப் பொருள்கள் இன்று வழங்கப்பட்டன.
நிவாரண உதவி வழங்கிய தன்னார்வ தொண்டு நிறுவனம் தெத்தி, ஐவநல்லூர், பாப்பாகோவில், பொரவச்சேரி உள்ளிட்ட 10 கிராம மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்களை கிராம மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி வாங்கிச் சென்றனர்.
இதையும் படிங்க...ஊரடங்கு உத்தரவு: ஐந்தறிவு ஜீவராசிகளுக்கு உணவளித்த தன்னார்வலர்கள்!