மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கீழ சட்டநாதபுரம் ஊராட்சியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (42). இவர் செங்கல் சூளையில் பணிபுரிந்துவந்தார். கடந்த சில மாதங்களாக சீனிவாசனுக்கு செங்கல் சூளை உரிமையாளர் சம்பள பாக்கி வைத்துள்ளார்.
அதைக் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 17) அவர் செங்கல் சூளையில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டுக்கப்பட்டார்.
உடனே அங்கு கூடிய அவரது உறவினர்கள் செங்கல் சூளை உரிமையாளர்தான் கொலைசெய்ததாகக் குற்றஞ்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.