தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறையில் மண்டல அளவிலான சதுரங்க போட்டி - ரொக்க பரிசு

மயிலாடுதுறையில் நடைபெற்ற மண்டல அளவிலான சதுரங்க போட்டியில் 254 பேர் பங்கேற்றனர்.

மண்டல அளவிலான சதுரங்க போட்டி
மண்டல அளவிலான சதுரங்க போட்டி

By

Published : Dec 5, 2022, 11:20 AM IST

மயிலாடுதுறை: மாவட்ட சதுரங்க கழகம் நடத்திய சோழமண்டல அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. மயிலாடுதுறை சில்வர் ஜூப்ளி பள்ளியில் சதுரங்க கழக மாவட்ட செயலாளர் வெற்றிவேந்தன் ஏற்பாட்டில் நடைபெற்ற போட்டிகளை, மாவட்ட சதுரங்க கழக செயற்குழு உறுப்பினர் பவுல்ராஜ் தொடங்கி வைத்தார்.

இதில் பெரியவர்களுக்கு தனியாகவும், 9,11,13 மற்றும் 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு தனியாகவும் போட்டிகள் நடத்தப்பட்டன. சோழமண்டல அளவிலான இப்போட்டிகளில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த போட்டியாளர்கள் 254 பேர் கலந்து கொண்டு விளையாடினர்.

மண்டல அளவிலான சதுரங்க போட்டி

இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பாராட்டு கேடயம் மற்றும் பெரியவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட உள்ளது.

இதையும் படிங்க: காசி தமிழ் சங்கத்திற்கு செல்லும் ரயிலை மறிக்க முயற்சி ? : போலீஸ் குவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details