வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தயார் - வருவாய் ஆணையர் தகவல் - Advisory meeting at Nagai Collector office
நாகை: வடகிழக்கு பருவமழையின்போது பாதிப்பு ஏற்பட்டால், அதனை எதிர்கொள்ளவும், நிர்வாக வசதிக்காகவும், கூடுதல் ஐஏஎஸ் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்
வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘காஞ்சிபுரம், திருவள்ளூர், போன்ற மாவட்டங்கள் பெருநகரம் என்பதாலும், பெருவெள்ளம் வந்தால் அதனை கையாள்வதற்கு ஏதுவாகவும் நிர்வாக வசதிக்காக கூடுதலாக மூத்த ஐஏஎஸ் அலுவலர்கள் வடகிழக்கு பருவமழை பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ளதால் முல்லைப்பெரியாறு அணை ஆய்வு!