தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 10, 2021, 10:20 AM IST

ETV Bharat / state

பூம்புகாரில் மறு தேர்தல் நடத்த வேண்டும் - நாம் தமிழர் கோரிக்கை

மயிலாடுதுறை: பூம்புகாரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலை ரத்துசெய்துவிட்டு மறு தேர்தல் நடத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் காளியம்மாள் கோரிக்கைவைத்துள்ளார்.

dfas
dfsa

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 175ஆவது வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளைவிட 50 வாக்குகள் அதிகமாக இருந்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பான சமாதான பேச்சுவார்த்தை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலர் பிரவீன் நாயர் தலைமையில் நடைபெற்றது.

இதில் பூம்புகார் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள், நாம் தமிழர் கட்சி முகவர்கள் கலந்துகொண்டு திருவாவடுதுறை வாக்குச்சாவடியில் நடந்த பிரச்சினைகள் குறித்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

அப்போது, 50 வாக்குகள் கூடுதலாக இருந்ததற்கான காரணத்தை அலுவலர்கள் விளக்கவில்லை, பூம்புகார் தொகுதியில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது புகார் அளித்தும் தேர்தல் அலுவலர்கள் கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றஞ்சாட்டினர்.

பின்னர் பிரவீன் நாயர் பேசுகையில், ”மாதிரி வாக்குகள் நீக்கப்படாமல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தால் அந்த வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் வாக்கு எண்ணும் நாளில் கடைசியாக எண்ணி விவிபேட்டில் பதிவான வாக்குச்சீட்டுகளை எண்ணி வாக்குகளைக் கணக்கீடு செய்வதற்கான விதிமுறைகளை 2018ஆம் ஆண்டு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

வாக்குச்சாவடி அலுவலர்களின் கவனக்குறைவால் மாதிரி வாக்குகள் நீக்கப்படாமல் இருந்திருக்கலாம். வெளி மாநிலத்தைச் சேர்ந்த பொதுப்பார்வையாளர் அசோக் பட்டேல் அங்கு வந்து ஆய்வுசெய்து தேர்தல் ஆணையத்திற்குத் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

அதனால் மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது திருவாவடுதுறையில் உள்ள 175ஆவது வாக்குச்சாவடி வாக்குகள் தனியாக எண்ணப்படும். அதனடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும் அதற்காக மறுதேர்தல் நடத்த இயலாது” என்றார்.

காளியம்மாள்

இதனையடுத்து, தேர்தல் விதிமுறைகளை மீறும் வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய நாம் தமிழர் கட்சியினர் பூம்புகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது குறித்தும், முறைகேடுகள் குறித்தும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கவுள்ளோம். அங்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details