தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சீர்காழி வர்த்தகர்களுடன் கரோனா நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை!

மயிலாடுதுறை: சீர்காழி அருகே வணிகர் சங்கங்கள், திருமண மண்டபம், தியேட்டர்களின் உரிமையாளர்களுடன் வருவாய் கோட்டாசியர் நாராயணன் கரோனா விதிமுறைகள் குறித்த ஆலோசனை நடத்தினார்.

சீர்காழி வர்த்தகர்களுடன் கரோனா நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை
சீர்காழி வர்த்தகர்களுடன் கரோனா நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

By

Published : Apr 17, 2021, 9:56 AM IST

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில், வணிகர் சங்கங்கள், திருமண மண்டபங்கள், தியேட்டர்கள், மருந்தகங்கள், உணவங்களின் உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஏப்.16) மாலை சீர்காழி வருவாய் கோட்டாசியர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய வருவாய் கோட்டாசியர் நாராயணன், “வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கிருமி நாசினி, சோப்பு கொண்டு கைகளைக் கழுவிட வசதிகள் செய்திருக்க வேண்டும். முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு பொருள்கள் வழங்கக்கூடாது.

அதேபோல் தகுந்த இடைவெளியைப் பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். திருமண மண்டபங்களில் தகுந்த இடைவெளியுடன் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி மண்டபங்களை பயன்பாட்டிற்கு விடவேண்டும். விதிமுறைகளை மீறினால் ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்” என எச்சரித்தார்.

இதையும் படிங்க: ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கரோனா விழிப்புணர்வு ஏற்டுத்திய காவல் துறை!

ABOUT THE AUTHOR

...view details