தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்கினை உறுதி செய்யும் கருவி தொடர்பான விழிப்புணர்வு - வாக்காளர்

நாகை: வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மயிலாடுதுறை கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது.

File pic

By

Published : Mar 18, 2019, 11:36 PM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் வாக்காளர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மயிலாடுதுறை கோட்டாட்சியர் கண்மணி தலைமையில் பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வாக்குகளை உறுதி செய்யும் கருவியை எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதில் அரசு அதிகாரிகள் மற்றும் தனியார் நர்சிங் சமுதாய கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு நோட்டீஸ் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் ஒட்டினர். மேலும் வாக்காளர்கள் அனைவரும் ஏப்ரல் 18-ம் தேதி தங்களது வாக்கினை பதிவு செய்ய வேண்டும் என்று பொது மக்களுக்கு அறிவுறுத்தினார்

ABOUT THE AUTHOR

...view details