மயிலாடுதுறை: இந்தியாவில் சகோதர - சகோதரிகளுக்கு இடையே ஒற்றுமையை வலுப்படுத்தும் ரக்ஷா பந்தன் பண்டிகை இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறையில் வசிக்கும் ஜெயின் சமூகத்தினர் ரக்ஷா பந்தன் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.
பெண்கள் மற்றும் ஆண்கள் தமது சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாக கருதுவோரின் கையில் விதவிதமான அலங்கார ராக்கிகளைக் கட்டி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.