தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராஜீவ்காந்தி சிறப்பு விளையாட்டு பயிற்சி மையம் - 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு - இந்திய விளையாட்டு ஆணையம்

நாகை: இந்திய விளையாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் மயிலாடுதுறை பயிற்சி மையத்தில் பயிற்சிபெறும் வீரர், வீராங்கணை தேர்வில் 700 மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

naagapatinam
naagapatinam

By

Published : Feb 7, 2020, 11:44 PM IST

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் ராஜீவ்காந்தி சிறப்பு விளையாட்டு பயிற்சி மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தில் 2020-21ஆம் ஆண்டில் பயிற்சி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கான தேர்வு இன்று தொடங்கியுள்ளது. தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தத் தேர்வில் இருபாலருக்கும் தடகளம், கையுந்துப்பந்து, கபாடி, பளுதூக்குதல் போட்டிகளும், பெண்களுக்கு மட்டும் கூடைப்பந்து, குத்துச்சண்டை போட்டிகளும் நடைபெறும்.

ராஜீவ்காந்தி சிறப்பு விளையாட்டு பயிற்சி மையம்

மொத்தம் 100 தேர்வர்களுக்கான இத்தேர்வில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவிகளுக்கு தொடர்ந்து 18 வயது வரை பயிற்சி அளிக்கப்படும். மேலும் அவர்களின் சாதனைக்கேற்ப சன்மானங்களும் வழங்கப்படும். இதில் வெற்றி பெறுபவர்களன் படிப்புச் செலவு, உணவு, இருப்பிடம், விளையாட்டு உபகரணங்கள், விபத்துக்காப்பீடு உள்ளிட்டச் சலுகைகள் மத்திய அரசு மூலம் அளிக்கப்படும்.

இதையும் படிங்க: 57 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மேற்கு வங்கத்தில் நடைபெறும் தேசிய போட்டிகள்!

ABOUT THE AUTHOR

...view details