தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’ரஜினிகாந்த் நல்லாயிருக்கணும்’ : நாகப்பட்டினத்தில் மும்மத வழிபாடு - actor rajinikanth news

நாகப்பட்டினம்: ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (டிச.12) மும்மத வழிபாடு நடத்தப்பட்டது.

நாகப்பட்டினத்தில் மும்மத வழிபாடு!
நாகப்பட்டினத்தில் மும்மத வழிபாடு!

By

Published : Dec 12, 2020, 3:21 PM IST

நடிகர் ரஜினிகாந்தின் 70ஆவது பிறந்த நாளை அவரின் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடிவருகின்றனர். கோயில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தி கொண்டாடிவருகின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்காவில் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. தர்கா பரம்பரை கலீபா மஸ்தான் சாஹிப் தலைமையில் ரஜினி மக்கள் மன்றத்தினர், நடிகர் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன், உடல் ஆரோக்கியத்துடன் வாழ சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

நாகப்பட்டினத்தில் மும்மத வழிபாடு!

அதன் பின்னர் அங்கிருந்த பொதுமக்களுக்குரஜினிமக்கள் மன்றத்தினர் இனிப்பு வழங்கினர். இதைப் போன்ற திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திலும், உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்திலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

ABOUT THE AUTHOR

...view details