தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

களமிறங்கிய ரஜினி மக்கள் மன்றத்தினர்...! - ஒருவாரத்திற்கு தேவையான அனைத்தும் தயார் - ரஜினி ரசிகர்மன்றம்

மயிலாடுதுறை: ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நரிக்குறவ சமுதாய மக்களுக்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் ஒருவார சமையலுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கிக் கொடுத்து உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

களமிறங்கிய ரஜினி மக்கள் மன்றத்தினர்
களமிறங்கிய ரஜினி மக்கள் மன்றத்தினர்

By

Published : Apr 8, 2020, 3:06 PM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 1000-க்கும் மேற்பட்ட நரிக்குறவ மக்கள் பல்லவராயன்பேட்டை என்ற கிராமத்தில் ஒரே இடத்தில் வசித்துவருகின்றனர்.

இவர்கள் மயிலாடுதுறை பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சீப்பு, ஊசி, பாசிமணி உள்ளிட்ட பொருள்களை சாலை ஓரங்களில் அமர்ந்து விற்பனை செய்து, அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு வாழ்ந்துவருகின்றனர்.

இந்நிலையில், கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், நரிக்குறவ மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு, அம்மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

களமிறங்கிய ரஜினி மக்கள் மன்றத்தினர்

இந்நிலையில் 75 நரிக்குறவ குடும்பத்தினருக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஒருவாரத்திற்கு சமையலுக்குத் தேவையான காய்கறிகள் வழங்கப்பட்டுள்ளன. மன்ற செயலாளர் ராஜேஸ்வரன் தலைமையில் நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று காய்கறிகள் அடங்கிய பைகளை வழங்கினர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டின் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை: அரசாணை வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details