தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரஜினி அரசியல் அறிவிப்பு: பட்டாசு மழையில் நாகப்பட்டினம்!

நாகப்பட்டினம்: ரஜினிகாந்த் அரசியல் பிரவேச அறிவிப்பையடுத்து, நாகப்பட்டினத்தில் ரஜினி மக்கள் மன்றத்தினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.

Rajini Makkal Mandram celebration
Rajini Makkal Mandram celebration

By

Published : Dec 3, 2020, 5:16 PM IST

நடிகர் ரஜினிகாந்த் வரப்போகின்ற சட்டபேரவை தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் நேர்மையான, ஊழலற்ற, ஆன்மீக அரசியல் உருவாகப் போவது உறுதி என தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்து, நாகப்பட்டினத்தில் ரஜினி மக்கள் மன்றத்தினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ரஜினி மக்கள் மன்றத்தினர் பட்டாசுகளை வெடித்து, பேருந்து நிலையத்திலிருந்த பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.

ரஜினி மக்கள் மன்றத்தினர் கொண்டாட்டம்

அதன் பின்னர் கூறிய நாகப்பட்டினம் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற இணை செயலாளர் குபேந்திரன், தங்களது நீண்டநாள் நம்பிக்கையை ரஜினிகாந்த் நிறைவேற்றியுள்ளார். வரும் சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளையும் கைப்பற்றி நடிகர் ரஜினிகாந்தை அரியணையில் அமர வைப்பதே ரஜினி மக்கள் மன்றத்தினர் எண்ணம். இதற்காக நாங்கள் கண்டிப்பாக உழைப்போம் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'மாத்துவோம்! எல்லாத்தையும் மாத்துவோம்! ஜனவரியில் கட்சி' - ரஜினிகாந்த்

ABOUT THE AUTHOR

...view details