மயிலாடுதுறை மாவட்டம் சேத்திரபாலபுரம் கிராமத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தின் 71ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் உற்சாகத்துடன் கொண்டாடினர். நாகப்பட்டினம் மாவட்ட இணை செயலாளர் சுதந்திரவீரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
ரஜினி பிறந்தநாள்: நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடிய ரஜினி மக்கள் மன்றத்தினர் - ரஜினி மக்கள் மன்றம்
நாகப்பட்டினம்: புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை ரஜினி மக்கள் மன்றத்தில் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வழங்கியுள்ளனர்.
rajini
சேத்திரபாலபுரம் கிராமத்தில் ரஜினி மக்கள் மன்ற கொடியை மாவட்ட செயலாளர் ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் 500 பேருக்கு தென்னங்கன்றுகளையும், புரெவி புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினர்.