தமிழ்நாடு சட்டப்பேரவையில் தென்காசி, செங்கல்பட்டு ஆகிய இரண்டு புதிய மாவட்டங்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நீண்ட கால கோரிக்கையாக இருந்துவரும் மயிலாடுதுறை மக்களின் தனி மாவட்டக் கோரிக்கை நிறைவேறவில்லை.
‘முதலமைச்சருக்கு ஒரு லட்சம் கையெழுத்துகள் அனுப்புவோம்’ - ரஜினி ரசிகர்கள்
நாகப்பட்டினம்: மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஒரு லட்சம் கையெழுத்துகள் பெற்று முதலமைச்சருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் அதிருப்தியடைந்த அம்மாவட்ட மக்கள், கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து-வருகின்றனர்.
அந்த வகையில், மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஒரு லட்சம் கையெழுத்து இயக்கம் நடத்தி பொதுமக்களிடமிருந்து கையெழுத்து பெற்று அதனை தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்ப ரஜினி மக்கள் மன்றம் தீர்மானித்துள்ளது. நேற்று நடைபெற்ற ரஜினி மக்கள் மன்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.