தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகூர் தர்கா முன்பு பட்டாசு வெடித்துக் கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்! - பட்டாசு வெடித்து கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்

நாகப்பட்டினம் : நடிகர் ரஜினி புதிய கட்சி தொடங்குவதற்கான தேதியை அறிவித்ததை அடுத்து அவரது ரசிகர்கள் நாகூர் தர்கா முன்பு பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

பட்டாசு வெடித்து கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்!
பட்டாசு வெடித்து கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்!

By

Published : Dec 3, 2020, 3:55 PM IST

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் என்றும், அதற்கான அறிவிப்பு வரும் டிசம்பர் 31ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பைக் கொண்டாடும்விதமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டத் துணைச் செயலர் சாகாமாலிம் தலைமையில் ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்தனர். நாகூர் தர்கா முன்பு நடைபெற்ற இந்நிகழ்வில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து அவர்கள் முழக்கமிட்டனர்.

பட்டாசு வெடித்துக் கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்!

தொடர்ந்து, பல ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் தங்களுக்கு நல்ல செய்தி கிடைத்திருப்பதாகவும், மக்கள் ஆதரவுடன் வெற்றிபெற்று தமிழ்நாட்டில் நேர்மையான, நாணயமான ஆட்சியை ரஜினிகாந்த் வழங்குவார் என்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:’கனவு நிச்சயமாக நிறைவேறும்’ - ரஜினி அரசியல் அறிவிப்பு குறித்து லாரன்ஸ்

ABOUT THE AUTHOR

...view details