தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயிலுக்குள் மழை நீர் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்! - மாயூரநாத சுவாமி கோயிலில் மழை நீர்

நாகை: மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோயிலில் மழை நீர் தேங்கி நிற்பதால் தூர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

rain water
rain water

By

Published : Dec 2, 2019, 8:38 AM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான அருள்மிகு அபயாம்பிகை சமேத மாயூரநாதர் கோயில் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக மயிலாடுதுறை பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மாயூரநாதர் கோயிலில் தீர்த்தக் குளம் நிரம்பி உள்ளது.

இந்த குளம் நிரம்பினால் அந்த தண்ணீர் அருகிலுள்ள செட்டி குளத்திற்கு வடிவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கோவில் குளத்தில் இருந்து செட்டிகுளத்தில் தண்ணீர் செல்லும் பாதை ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதால் வெள்ளநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தீர்த்த குளம் நிரம்பி வெள்ளநீர் கோவிலுக்குள் புகுந்து அங்கேயே தேங்கி நிற்கிறது.

மேலும் மழைநீர் கோவிலுக்குள் புகுந்து தீர்த்த குளத்தின் தண்ணீருடன் சேர்ந்து சுவாமி அம்பாள் சன்னதிகளில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நிற்பதால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். பூஜைக்கு மட்டும் சிவாச்சாரியார்கள் தண்ணீரை கடந்து கோவிலுக்குள் சென்று வருகின்றனர். மூன்று நாட்கள் தொடர் மழையால் தேங்கியுள்ள தண்ணீரினால் தற்போது துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது.

கோயிலுக்குள் மழை நீர் புகுந்து தொற்று நோய் ஏற்படும் அபாயம்

இதனால் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்க கோவில் நிர்வாகத்துடன் மாவட்ட நிர்வாகமும் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் கோவில் குளத்தில் இருந்து செட்டி குளத்திற்குச் தண்ணீர் செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக அகற்றிட வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்களும் பக்தர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details