தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீர்வள மேலாண்மை விழிப்புணர்வு முகாம்: ஆசிரியர்கள் பங்கேற்பு! - NSS

நாகை: மழைநீர் சேகரிப்பு,  நீர்வள மேலாண்மை குறித்து ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு முகாமில் நுாற்றுக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

awareness-program

By

Published : Jul 17, 2019, 3:51 PM IST

நாகையில் தேசிய பசுமைப் படை சார்பாக, நீர் மேலாண்மை குறித்த ஒருநாள் கருத்தரங்கு இன்று நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

நீர்வள மேலாண்மை விழிப்புணர்வு முகாம்

அப்போது கூட்டத்தில் பேசிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், ”நாகை மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பை செயல்படுத்த வேண்டும், பள்ளிகளில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க நீரை சிக்கனமாக பயன்படுத்த மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும்” என அறிவுறுத்தினார்.

இதனையடுத்து, பள்ளி வளாகத்தை பசுமையாக்குதல், பள்ளிகள் முழுவதும் மரக்கன்றுகள் நடுதல், கழிவு நீரை பயன்படுத்தித் தோட்டங்களை உருவாக்குதல் போன்ற பல்வேறு பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மயிலாடுதுறை கல்வி மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார், நாகை மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன், மாவட்ட கல்வி அலுவலர் வேதரத்தினம், பள்ளி துணை ஆய்வாளர் ராமநாதன் தேசிய பசுமைப் படை உதவி ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details