வறட்சி வாட்டி வதைக்கும் தமிழ்நாட்டில் மழை வேண்டி நாகை அடுத்த நாகூர் கடற்கரையில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பருவமழை பொய்த்ததின் காரணமாக தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்கள் வறண்டு காணப்படுவதால், விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது.
மழை வேண்டி நாகூரில் சிறப்புப் பிரார்த்தனை - இஸ்லாமியர்
நாகை: மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் நாகூரில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
Muslim
சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் நாகூர் கடற்கரையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் பெண்கள் உட்பட 300 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மனமுருகி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.