நாகப்பட்டினம்அடுத்த வெளிப்பாளையம் ரயில் நிலையத்தின் அருகேவுள்ள தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று சிதறிய நிலையில் கிடப்பதாக நாகை ரயில்வே காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல் துறையினர், ஆய்வு செய்தனர்.
அப்போது சென்னை - காரைக்கால் கம்பன் விரைவு ரயில் மோதி 25 வயதுடைய இளைஞர் கை, கால், தலை சிதறிய நிலையில், உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. தொடர்ந்து சடலத்தை மீட்ட காவல் துறையினர், உடற்கூராய்வுக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.