நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் கடந்த 14ஆம் தேதி மனநலம் பாதித்த பெண் ஒருவர் சுற்றித்திரிந்துள்ளார். அவரை ரயில் நிலையத்திலிருந்து வெளியேற்ற ஆயுதப்படை காவலர்கள் இரவு நேரத்தில் முயற்சிசெய்தனர். ஆனால் மீண்டும் மீண்டும் அந்தப் பெண், ரயில் நிலையத்திற்குள்ளேயே சென்றுள்ளார்.
இதனால், ஆயுதப்படையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற காவலர் கையிலிருந்த லத்தியால் அந்தப் பெண்ணை சரமாரியாகத் தாக்கினார். இதில் அப்பெண்ணின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
இதைப் பார்த்த பொதுமக்கள் காவலரிடம் வாக்குவாதம் செய்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மனநலம் பாதித்த பெண்ணை அரசு காப்பகத்தில் சேர்க்க முயற்சி செய்யாமல் காவலர் கொடூரமாக தாக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
மனநலம் பாதித்தப் பெண்ணை தாக்கிய ரயில்வே காவலர் பணியிடை நீக்கம் இதனைத் தொடர்ந்து திருச்சி ரயில்வே பாதுகாப்பு ஆணையர் உத்தரவின்பேரில் மணநலம் பாதிக்கப்பட்ட பெண்ணைத் தாக்கிய கிருஷ்ணமூர்த்தி பணியிடை நீக்கம்செய்யப்பட்டார்.
இதையும் படிங்க:மனநலம் பாதித்தப் பெண்ணின் மண்டையை உடைத்த ரயில்வே காவலர்