தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரயில் நிலைய கள வகுப்பு - பள்ளி பரிமாற்றத் திட்டம்

நாகை: அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரயில், ரயில் நிலையம் குறித்த நேரடி கள விளக்க வகுப்பு நடத்தப்பட்டது.

Railway Field Class for Public School Students
Railway Field Class for Public School Students

By

Published : Jan 8, 2020, 7:02 PM IST

பள்ளி பரிமாற்றத் திட்டத்தின் கீழ் நாகை மாவட்டம், குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இன்று நாகை ரயில் நிலையத்தில் நேரடி கள விளக்க வகுப்பு நடைபெற்றது.

இதில் ரயில் நிலையம் குறித்தும் ரயில் பயணம் குறித்தும் மாணவர்களுக்கு நாகை ரயில்வே கோட்ட மேலாளர் விளக்கமளித்தார். மேலும் ரயிலில் அபாயச் சங்கிலி, ரயில்வே கிராஸிங் உள்ளிட்டவை குறித்த மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு நேரடியாக விளக்கமளிக்கப்பட்டது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ரயில் நிலைய கள வகுப்பு

அதனைத் தொடர்ந்து குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள், கீச்சாங்குப்பம் பள்ளிக்குச் சென்று அங்குள்ள சூழலையும் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் நடைமுறையும் அறிந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ரயில்வே தனியார் மயம் - தொழிலாளர்கள் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details