தமிழ்நாடு

tamil nadu

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ரயில் மறியல்!

மயிலாடுதுறை: வேளாண் சட்டங்களுக்கு எதிராக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

By

Published : Dec 9, 2020, 3:54 PM IST

Published : Dec 9, 2020, 3:54 PM IST

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ரயில் மறியல்
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ரயில் மறியல்

வேளாண் சட்டங்களை எதிர்த்து மயிலாடுதுறை மாவட்ட ரயில் நிலையத்தில் இன்று (டிச.9) பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

இதையடுத்து ரயில் நிலையம் முன்பு காவல் துறையினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டனர். இதை அறிந்த போராட்டக்காரர்கள் மாப்படுகை ரயில் தண்டவாளம் வழியாக மத்திய அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பிக் கொண்டு ரயில் நிலையம் வந்தனர்.

இதனால் சென்னை செல்ல இருந்த சோழன் எக்ஸ்பிரஸ் நிறுத்தி வைக்கப்பட்டது.

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ரயில் மறியல்

உடனே அங்கு சென்ற காவல் துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர். பின்னர் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது.

அப்போதும் அந்த ரயிலை மறிக்க முயன்ற போராட்டக்காரர்களை காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு...மு.க.ஸ்டாலிக்கு அமைச்சர் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details