மயிலாடுதுறை: சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை பழங்காவிரி ஆற்றில் உள்ள 44 இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. எஞ்சிய ஆறு இடங்களில் இன்று (ஆக. 6) ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.
கலைஞர் காலனியில் பழங்காவேரி ஆற்றின் கரையோரம் உள்ள சூர்யா, புனிதவதி என்பவரது வீடுகளில் உள்ள ஆக்ரமிப்புகள் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா முன்னிலையில் மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்த ராஜ் தலைமையில் காவல் துறையினர் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்ற முற்பட்டனர்.
அப்போது, குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஒருவர் மண்ணெண்ணெய் கேனை எடுத்துத் தீக்குளிக்க முற்பட்டார். உடனடியாக இதனைக் கண்ட காவல் துறையினர் அவர் உள்பட ஐந்து பேரை பிடித்து காவல் வேனில் ஏற்றினர்.